Multi Starrer தொடரில் நாம் இன்று
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்ற கதாநாகர்களுடன் நடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.
1. நடிகர் திலகமும் புரட்சி தலைவரும் (Sivaji Ganesan and MGR together)
2. நடிகர் திலகமும் காதல் மன்னனும் (Sivaji Ganesan and Gemini Ganesan together)
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் காதல் மன்னன் ஜெமினி கணேசனும் பல வெற்றி திரை படங்களில் நடித்துள்ளனர். இருவரும் முதலில் இணைந்து நடித்த திரை படம் “பெண்ணின் பெருமை”, இத்திரைபட்த்தில் ஜெமினி கணேசன் கதாநாயகனாகவும் சிவாஜி வில்லனாகவும் நடித்து இருபர்கள். பிறகு இருவரும் இணைந்து நடித்த படங்கள் “மர்ம வீரன்”, “ஸ்கூல் மாஸ்டர்(கன்னடம்)”, “பதிபக்தி”, “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “கப்பலோட்டிய தமிழன்”, “பசமலர்”, “பாவ மன்னிப்பு”, “பந்த பாசம்”, “பார்த்தலே பசி தீரும்”, “சரஸ்வதி சபதம்”, “கந்தன் கருணை”, “திருவருட்செல்வர்” மற்றும் “உனக்காக நான்” அகிய படங்களில் இருவரும் கதாநாகர்களாக நடித்தனர். இருப்பினும் இருவரும் இணைந்து நடித்த கடைசி திரைபடம் என்றால் அது கமல் ஹசன் கதாநாகனாக நடித்த “நாம் பிறந்த மண்” திரைபடம்தான்.
3. நடிகர் திலகமும் இலட்சிய நடிகரும் (Sivaji Ganesan and S. S. Rajendran together)
நடிகர் திலகம் சிவாஜி
கணேசன் மற்றும் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன், இருவரும் ”பரசக்தி” திரைபடத்தில் இணைந்தே அறிமுகம் ஆனார்கள். அதன் பிறகு இருவரும் பல திரைபடங்களில் இணைந்து நடித்துள்ளனர். அவை “பணம்”, “மனோகரா”, “ராஜா ராணி”, “ரங்கோன் ராதா”, “தெய்வ பிறவி”, “செந்தாமரை”, “ஆலயமணி”, “குங்குமம்”, “கை கொடுத்த தெய்வம்”, “பச்சை விளக்கு”, “பழனி”, “சாந்தி”, “தாயே உனக்காக” மற்றும் “எதிரோலி” அகிய திரைபடங்கள் ஆகும். இதில் “தாயே உனக்காக” படத்தில் மட்டும் இருவரும் இணைந்து நடித்து போல் காட்சியே இல்லை.
4. நடிகர் திலகமும் நவரசத் திலகமும் (Sivaji Ganesan and Muthuraman together)
நவரசத் திலகம் முத்துராமன் அவர்கள் அனைத்து கதாபத்திரங்களையும் திறம்பட செய்பவர். அவர் நடிகர் திலகம் சிவாஜியுடன் பல படங்களில் நடித்துள்ளர். அவற்றில் சில “ரங்கோன் ராதா”, “படிக்காத மேதை”, ”படித்தால் மட்டும் போதுமா”, “அன்னை இல்லம்”. “குங்குமம்”, “பார் மகளே பார்”, “கர்ணன்”. “பழனி”, “திருவிளையடல்”, ”தாயே உனக்காக”, “மகாகவி காளிதாஸ்”, “தாங்கை”, “நெஞ்சிருக்கும் வரை”, “ஊட்டி வரை உறவு”, “திருவருட்செல்வர்”, “காவல் தெய்வம்”, “குருதட்சணை”, “நிரைகுடம்”, “சிவந்த மண்”. “எங்கிருந்தோ வந்தாள்”, “ராமன் எத்தனை ராமனடி”, “சொர்க்கம்”, “இரு துருவம்”, “அருனோதயம்”, “சவாலோ
சமாளி”, “மூன்று தெய்வங்கள்”, “தங்கைக்காக”,
“தர்மம் எங்கே”, “பென்னூஞ்சல்”, “ராஜ ராஜ சோழன்”, “வாணி ராணி”, “அவன் தான் மனிதன்”, “வைர நெஞ்சம்” மற்றும் “சித்ரா பௌர்னமி” அகிய
திரைபடங்களில் நடித்துள்ளனர்.
5. நடிகர் திலகமும் நடிப்புசுடரும் (Sivaji Ganesan and AVM Rajan together)
நடிப்புசுடர் எ.வி.எம். ராஜன், அவர்கள்
நடிகர் திலகம் சிவாஜியுடன் சில திரைபடங்களில் நடித்துள்ளர். அவை “பார் மகளே பார்”, “ஆண்டவன் கட்டளை”, “பச்சை விளக்கு”, “கலட்டா கல்யாணம்”, “தில்லானா மோகனாம்பாள்”, “மனிதரில் மாணிக்கம்”, “சிவகாமியின் செல்வன்”, “ரோஜாவின் ராஜா” மற்றும் “ஊரும் உறவும்”. இவற்றில் “மனிதரில் மாணிக்கம்” திரைபடத்தை தவிர மற்ற அனைத்து திரைபடங்களிலும் சிவாஜி முதன்மை கதாபத்திரதிலும் எ.வி.எம். ராஜன் துணை கதாபத்திரதிலும் நடித்துபார்கள். ஆனால் “மனிதரில் மாணிக்கம்” திரைபடத்தில் மட்டும் எ.வி.எம். ராஜன் முதன்மை கதாபத்திரதிலும் சிவாஜி கௌரவ தோற்றத்திலும் நடித்திருப்பார்கள்.
6. நடிகர் திலகமும் மக்கள் கலைஞரும் (Sivaji Ganesan and JaiShankar together)
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், அவர்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து பல திரைபடங்களில் நடித்துள்ளர். அவை “அன்பளிப்பு”, “குலமா குணமா”,
“சினிமா பைத்தியம்”, “ஜஸ்டீஸ் கோபிநாத்”,
“கீழ்வானம் சிவக்கும்”, “தீர்ப்பு”, “உருவங்கள் மாறலாம்”, “திருப்பம்”, “வாழ்க்கை”, “சரித்திர நாயகன்”, “எழுதாத சட்டங்கள்”, “இரு மேதைகள்”, “பந்தம்”, “நேர்மை”, “படிக்காதவன்”,
“மருமகள்” மற்றும் “வீரபாண்டியன்”
போன்ற திரைபடங்களில் நடித்துள்ளனர்.
7. நடிகர் திலகமும் ரவிசந்திரனும் (Sivaji Ganesan and RaviChandran together)
நடிகர் ரவிசந்திரன் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் “மோட்டார்
சுந்தரம் பிள்ளை” மற்றும் “கவரிமான்” என இரு படங்களில் இணைந்து நடித்துள்ளார். இதில் “கவரிமான்” திரைபடத்தில் ரவிசந்திரன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.
8. நடிகர் திலகமும் மார்க்கண்டேயனும் (Sivaji Ganesan and SivaKumar together)
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் சிவகுமார் அவர்கள் நடிகர் திலகம்
சிவாஜி கணேசனுடன் பல திரைபடங்களில் நடித்துள்ளார். “மோட்டார் சுந்தரம் பிள்ளை”,
“தாயே உனக்காக”, “சரஸ்வதி சபதம்”, “கந்தன் கருணை”, “திருமாள் பொருமை”, “உயர்ந்த மனிதன்”, “காவல் தெய்வம்”, “விளையாட்டுப்பிள்ளை”, “எதிரோலி”, “மூன்று தெய்வங்கள்”, “பாபு”, “பாரத
விலாஸ்”, “ராஜ ராஜ சோழன்”, “கிரஹபிரவேசம்”
மற்றும் “பசும்பொன்” போன்ற
திரைபடங்களில்
இருவரும் நடித்துள்ளனர்.
9. நடிகர் திலகமுக் சுப்பர் ஸ்டாரும் (Sivaji Ganesan and Rajini Kanth together)
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் சில படங்களில் நடித்துள்ளார். அவை
“ஜஸ்டீஸ் கோபிநாத்”, “நான் வாழவைப்பேன்”,
“நட்சத்திரம்”, “உருவங்கள் மாறலாம்”, “படிக்காதவன்”, “விடுதலை” மற்றும்
“படைப்பா”. இவற்றில் “ஜஸ்டீஸ்
கோபிநாத்” மற்றும் “நான் வாழவைப்போன்”
ஆகிய படங்களில் சிவாஜி கணேசன் முதன்மை கதாபத்திரத்திலும் ரஜினிகாந்த்
துணைகதாபத்திரத்திலும் நடித்திருப்பார்கள். “நட்சத்திரம்”
மற்றும் “உருவங்கள் மாறலாம்” ஆகிய படங்களில் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்கள்.
“படிக்காதவன்”, “விடுதலை” மற்றும் “படைப்பா” ஆகிய படங்களில்
ரஜினிகாந்த் முதன்மை கதாபத்திரத்திலும் சிவாஜி கணேசன் துணைகதாபத்திரத்திலும் நடித்திருப்பார்கள்.
10. நடிகர் திலகமும் உலக நாயகனும் (Sivaji Ganesan and Kamal Haasan together)
உலக நாயகன் கமல் ஹாசன் நடிகர் திலகம்
சிவாஜி கணேசனுடன் சில திரைபடங்களில் நடித்துள்ளார். அவை “பார்த்தலே பசி தீரும்”, “சினிமா பைத்தியம்”, ”சத்தியம்”, “நாம் பிறந்த மண்”, “நட்சத்திரம்”,
“உருவங்கள் மாறலாம்” மற்றும் “தேவர் மகன்” போன்ற திரைபடங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
அவற்றில் “பார்த்தலே பசி தீரும்” திரைபடத்தில் சிவாஜி கணேசனுடன் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.
”சத்தியம்” படத்தில் சிவாஜி கணேசன் முதன்மை கதாபத்திரத்திலும்
கமல் ஹாசன் துணைகதாபத்திரத்திலும் நடித்திருப்பார்கள். “நட்சத்திரம்”
மற்றும் “உருவங்கள் மாறலாம்” ஆகிய படங்களில் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்கள்.
“சினிமா பைத்தியம்” திரைபடத்தில் கமல் ஹாசன் கதாநாயகனாகவும்
சிவாஜி கணேசன் சிறப்பு தேற்றத்திலும் நடித்திருப்பார்கள். “நாம் பிறந்த மண்” மற்றும் “தேவர் மகன்”
ஆகிய படங்களில் கமல் ஹாசன் முதன்மை கதாபத்திரத்திலும் சிவாஜி கணேசன்
துணைகதாபத்திரத்திலும் நடித்திருப்பார்கள்.
11. நடிகர் திலகமும் புரட்சி கலைஞரும் (Sivaji Ganesan and Vijaya Kanth together)
புரட்சி கலைஞர் விஜயகாந்த்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் “வீரபாண்டியன்” என்ற ஒரே
ஒரு திரைபடத்தில் இணைந்து நடித்துள்ளார்.
12. நடிகர் திலகமும் புரட்சி தமிழனும் (Sivaji Ganesan and Sathyaraj together)
புரட்சி தமிழன் சத்யராஜ்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் “ஹிட்லர் உமாநாத்”, “சந்திப்பு”,
“சிரஞ்சீவி”, “நீதியின் நிழல்”, “முதல் மரியாதை”, “முத்துக்கள் மூன்று”, “ஜல்லிகட்டு” மற்றும் “புதிய வானம்”.
இதில் “ஹிட்லர் உமாநாத்”, “சந்திப்பு”, “சிரஞ்சீவி”, “நீதியின்
நிழல்” மற்றும் “முதல் மரியாதை”
ஆகிய படங்களில் சத்யராஜ் சிவாஜி கணேசனுக்கு வில்லனாக நடித்துள்ளார்.
“முத்துக்கள் மூன்று”, “ஜல்லிகட்டு” மற்றும் “புதிய வானம்” ஆகிய படங்களில்
இருவரும் முதன்மை கதாபத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
13. நடிகர் திலகமும் திரைகதை மன்னனும் (Sivaji Ganesan and K. Bhagyaraj together)
தமிழ் சினிமாவில் திரைகதை மன்னன் பாக்கியராஜ் நடிகர் திலகம் சிவாஜி
கணேசனுடன் “தாவனி கனவுகள்” என்ற ஒரே ஒரு திரைபடத்தில்
இணைந்து நடித்துள்ளார்.
14. நடிகர் திலகமும் இளைய திலகமும் (Sivaji Ganesan and Prabhu Ganesan together)
இளைய திலகம் பிரபு
அவர்கள் தனது தந்தையும் நடிகர் திலகமுமான சிவாஜி கணேசனுடன் இணைந்து பல திரைபடங்களில்
நடித்துள்ளார்கள். அவை “சங்கிலி”,
“நீதிபதி”, “சந்திப்பு”, “சுமங்கலி”, ”மிருதங்க சக்ரவர்த்தி”, “வெள்ளை ரோஜா”, “திருப்பம்”, “தராசு”,
“சரித்திர நாயகன்”, ”சிம்ம சொப்பனம்”,
“எழுதாத சட்டங்கள்”, “இரு மேதைகள்”, “வம்ச விளக்கு”, “நாம் இருவர்”, “நீதியின் நிழல்”, “நேர்மை”, “ராஜ ரிஷி”, “சந்திப்பு”, “நாண்கல்” மற்றும் “பசும்பொன்”.
இவற்றில் அதிக படங்களில் இருவரும் தந்தை மகன் கதாபத்திரங்களிலே நடித்திருப்பார்கள்.
15. நடிகர் திலகமும் நவரச நாயகனும் (Sivaji Ganesan and Karthik Muthuraman together)
நடிகர் திலகம் சிவாஜி
கணேசனும் நவரச நாயகன் கார்த்திக் அவர்கள் “ராஜ மரியாதை” என்ற ஒரே
ஒரு திரைபடத்தில் இணைந்து நடித்துள்ளார்.
16. நடிகர் திலகமும் புரட்சி நடிகரும் (Sivaji Ganesan and Murali together)
நடிகர் திலகம் சிவாஜி
கணேசன் மற்றும் புரட்சி நடிகர் முரளியும் மூன்று திரைபடங்களில்
நடித்துள்ளனர். அவை “மண்ணுக்குள் வைரம்”, “குடும்பம் ஒரு கோயில்” மற்றும் “என் அசை ராசாவே”.
17. நடிகர் திலகமும் ஆக்ஷன் கிங்கும் (Sivaji Ganesan and Arjun together)
ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து இரண்டு திரைபடங்களில்
நடித்துள்ளார். அவை “முதல் குரல்” மற்றும் “மன்னவரு சின்னவரு”.
வெள்ளி விழா நாயகன்
மோகன் நடிகர் திலகம் சிவாஜியுடன் மூன்று திரைபடங்களில் நடித்துள்ளனர். அவை
“ஜெனரல் சக்ரவர்த்தி”, “கருடா சௌக்கியமா”
மற்றும் “கிருஷ்ணன் வந்தான்”.
நடிகர் தியாகராஜன் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் “கருடா சௌக்கியமா” மற்றும் “நெஞ்சங்கள்” என இரு படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
நடிகர் சுரேஷ் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் “துணை”,
“வெள்ளை ரோஜா” மற்றும் “மருமகள்” என மூன்று திரைபடங்களில் இணைந்து நடித்துள்ளார்.
நடிகர் எஸ்.வீ.
சேகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இரு திரைபடங்களில் நடித்துள்ளார்.
அவை “உருவங்கள் மாறலாம்” மற்றும் “லட்சுமி வந்தாச்சு” போன்ற
திரைபடங்களில்
இருவரும் நடித்துள்ளனர். இதில் “உருவங்கள் மாறலாம்” திரைபடத்தில் சிவாஜி கணேசன் சிறப்பு தோற்றத்திலும் எஸ்.வீ.
சேகர் எதிர்மறை கதாபத்திரத்திலும் நடித்திருப்பார்கள்.
தமிழ் சினிமான்வின்
விகடகவி என பார்த்திபனை கூறலாம். பார்த்திபன் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன்
“தாவனி கன்வுகள்” திரைபடத்தில் மிக சிறிய கதாபத்திரதில்
தபால்கரானாக நடித்திருப்பார்.
நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த்
பாபு அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் “பந்தம்”
என்ற ஒரு திரைபடத்தில் இணைந்து நடித்துள்ளார்.
நடிகர் பாண்டியராஜன்
அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் “தாய்க்கு ஒரு தாலாட்டு” மற்றும் “முத்துக்கள் மூன்று” என்ற
இரு திரைபடத்தில் இணைந்து நடித்துள்ளார்.
இளைய தளபதி விஜய் ஒருவரே
இளம் தலைமுறையினரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்த ஒரே நடிகர். இளைய
தளபதி விஜயும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த ஒரே திரைபடம்
“ஒன்ஸ் மோர்”.
தெலுங்கு திரையுலகின்
முடிசூடா மன்ன்ன் என்.டி. ராமா ராவுடன் நடிகர்
திலகம் சிவாஜி கணேசன் சில திரைபடங்களில் இணைந்து நடித்துள்ளார். அவை “தெனாலி ராமன்”, “மர்ம வீரன்”,
“சம்பூரண ராமாயணம்”, “கர்ணன்”, “ராமதாசு (தெலுங்கு)” மற்றும்
“சணக்ய சந்திரகுப்தா (தெலுங்கு)”. இவற்றில் “ராமதாசு (தெலுங்கு)”
மற்றும் “சணக்ய சந்திரகுப்தா (தெலுங்கு)” ஆகிய இரு தெலுங்கு திரைபடங்களில் நடிகர் திலகம்
சிவாஜி கணேசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்-சிவாஜி என்ற இருதுருவங்கள் இருத்து போல் தெலுங்கு
சினிமாவில் என்.டி.ஆர்-ஏ.என்.ஆர் இருந்தார்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஏ.என்.ஆர்(அக்கினி நாகேஷ்வர ராவ்) உடன்
சில திரைபடங்களில் பணியற்றி உள்ளார். அவை “பரதேசி (தெலுங்கு)”, “ராமதாசு
(தெலுங்கு)”, “பங்காரு பாபு (தெலுங்கு)”, “பாரத விலாஸ்”, “பக்த
துகாராம் (தெலுங்கு)”, “சணக்ய சந்திரகுப்தா
(தெலுங்கு)” மற்றும் “அக்கினி
புத்ருடு (தெலுங்கு)”.
இவற்றில் “பாரத விலாஸ்” திரைபடத்தை
தவிர மற்றவை தெலுங்கு
திரைபட்ங்கள், மேலும் அவை அனைத்திலும் நடிகர் திலகம் சிறப்பு
தோற்றத்தில் நடித்திருந்தார்.
நடிகர் திலகம் சிவாஜி
கணேசன் மற்றும் தெலுங்கு நடிகர் எல். காந்தா ராவுடன் இரு திரைபடங்களில்
நடித்துள்ளார். அவை “ஜீவன தீரலு (தெலுங்கு)”
மற்றும் “விஸ்வநாத நாயகடு (தெலுங்கு)” ஆகிய இரு தெலுங்கு படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் சோபன்
பாபு அவர்கள் நடிகர் திலகம் சிவாஜியுடன் இரு
திரைபடங்களில்
நடித்துள்ளார். அவை “கர்ணன்” மற்றும் “பங்காரு பாபு (தெலுங்கு)”.
தெலுங்கு நடிகர் கிருஷ்ணம்
ராஜு அவர்கள் நடிகர் திலகம் சிவாஜியுடன் இரு திரைபடங்களில் நடித்துள்ளர். அவை “ஜீவன தீரலு
(தெலுங்கு)” மற்றும் “விஸ்வநாத
நாயகடு (தெலுங்கு)” ஆகிய இரு தெலுங்கு படங்களில்
இணைந்து நடித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின்
சுப்பர் ஸ்டார் என அழைக்கபடுபவர் கிருஷ்ணா, அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து
மூன்று திரைபடங்களில் நடித்துள்ளர். அவை “பங்காரு பாபு (தெலுங்கு)” “பெழுவெத
பப்புலி (தெலுங்கு)” மற்றும் “விஸ்வநாத நாயகடு (தெலுங்கு)” ஆகிய
மூன்று தெலுங்கு படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் சந்திர மோகன் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் “அந்தமான் காதலி” என்ற ஒரே திரைபடத்தில் இணைந்து நடித்திருப்பார்.
தெலுங்கு சினிமாவின்
சத்யராஜ் எனவே சொல்லாம், காரணம் தனது தனித்துவ வில்லன் நடிப்பால் கதாநாகனானவர்.
இவர் தனது அரம்ப காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பல திரைபடங்களில்
வில்லனாக நடித்துள்ளார். அவை “அன்னன் ஒரு
கோயில்” “வாழ்க்கை அலைகள்”, “வெற்றிக்கு
ஒருவன்”, “நட்சத்திரம்”, “ரத்தப்பாசம்”, “ஜீவன தீரலு (தெலுங்கு)” மற்றும் “விஸ்வநாத நாயகடு (தெலுங்கு)” ஆகியவை அகும்.
தெலுங்கு நடிகர் அக்கினி
நாகர்ஜுனா அவர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் “அக்கினி புத்ருடு (தெலுங்கு)” என்ற ஒரே தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்த ஒரே திரைபட்ம் “மன்னவரு
சின்னவரு”, இதில் ஸ்ரீஹரி வில்லன் வேடத்தில் நடித்திருப்பார்.
பழம்பெரும் கன்னட நடிகர்
உதய்குமார் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் “ஸ்கூல் மாஸ்டர் (கன்னடம்)”
என்ற ஒரே ஒரு கன்னட திரைபடத்தில் இணைந்து நடித்துள்ளார்.
கன்னட திரையுலகின்
சுப்பர் ஸ்டாரான விஷ்னுவர்தன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் “விடுதலை”
என்ற ஒரு தமிழ் திரைபடத்தில் இணைந்து நடித்துள்ளார்.
மலையாளம் திரையுலகின்
ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்பட்ட பிரேம் நசீர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து
சில திரைபடங்களில் நடித்துள்ளார். அவை “பாவைவிளக்கு”,
“பாலும் பழமும்”, “ஸ்கூல் மாஸ்டர் (மலையாளம்)”, “முரடன் முத்து” மற்றும்
“தச்சோழி அம்பு (மலையாளம்)”.
மலையாள நடிகர் டி. சுகுமாரன்
நாயர் அவர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து மூன்று
திரைபடங்களில் நடித்துள்ளார். அவை “ஸ்கூல்
மாஸ்டர் (மலையாளம்)”, “தவபுதல்வன்”
மற்றும் “ஸ்வர்னசமரம் (மலையாளம்)”.
இதில் “ஸ்வர்னசமரம் (மலையாளம்)”
திரைபடம் வெளியாகவே இல்லை.
நடிகர் திலகம் சிவாஜி
கணேசனுடன் மலையாள நடிகர் மது “பாரத விலாஸ்” என்ற ஒரே
ஒரு திரைபடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி
கணேசனும் மற்றும் மலையாள நடிகர் ஜெயனும் “தச்சோழி
அம்பு (மலையாளம்)” என்ற ஒரே ஒரு மலையாள
திரைபடத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
மலையாள சினிமாவின்
கம்லீட் அக்டர் என அழைக்கப்படுபவர் மோகன் லால் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து “ஸ்வர்னசமரம்
(மலையாளம்)” மற்றும் “ஒரு
யாத்ரமொழி” என்ற இரண்டு திரைபடங்களில் நடித்துள்ளார்.
இதில் “ஸ்வர்னசமரம் (மலையாளம்)”
திரைபடம் வெளியாகவே இல்லை.
பிரதாப் கே. பொத்தன்
அவர்கள் நடிகர் திலகம் சிவாஜியுடன் “ஜல்லிகட்டு” என்ற ஒரே ஒரு திரைபடத்தில் நடித்துள்ளார்.
நடிகர் ரஹ்மான் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் “அன்புள்ள அப்பா” என்ற ஒரே ஒரு திரைபடத்தில் நடித்துள்ளார்.
ஹிந்தி நடிகர் ராஜேந்திர குமார் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் “தர்டி (ஹிந்தி)” என்ற ஒரே ஒரு திரைபடத்தில் இணைந்து நடித்துள்ளார். இதில் சிவாஜி கணேசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.
ஹிந்தி நடிகர் ராஜேஷ்
கன்னா நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ”பங்காரு பாபு (தெலுங்கு)”
என்ற ஒரு தெலுங்கு திரைபட்தில் இணைந்து நடித்துள்ளார்.
ஹிந்தி நடிகர் சஞ்சிவ் குமார் அவர்கள் “பாரத விலாஸ்” என்ற திரைபடத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.
பின் குறிப்பு:-
எனக்கு தெரிந்த விவரங்களை இங்கே எழுதியுள்ளேன். இதில் எதேனும் குறைகள் இருந்தாலோ விவரங்கள் விடுபட்டிருந்தாலோ சுட்டிகாட்டவும். உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறென். நன்றி.