E. R. சகாதேவன் ஒரு மூத்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் தனது பண்பட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். இவர் 1937 ஆம் ஆண்டு வெளியான ராஜசேகரன் எமந்த சோனகிரி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அவரது உடலமைப்பு, உடல்மொழி, தெளிவான உச்சரிப்பு பல பார்வையாளர்களை கவர்ந்தது. "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் பத்மினியை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் நாகலிங்கம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சிறந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தினார்.
ஆரம்ப காலத்தில் பல மேடை நாடகங்களில் நடித்தவர், பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவரது முதல் படம் ராஜசேகரன். 1940-களில் தொடங்கி வில்லன் வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்தார். ராஜசேகரன் (1937) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 'சதி சுகன்யா' (1942) படத்தில் கிருதவர்மனாகவும், 'ஆயிரம் தலைவங்கிய அபூர்வ சிந்தாமணி' (1947) படத்தில் அபூர்வ சிந்தாமணியின் தாய்மாமன் புரந்தனாராகவும் நடித்தார். திருவிளையாடல் படத்தில் இசை அறிஞர் ஹேமநாத பாகவதராக இருந்த T. S. பாலையாவை அரண்மனைக்கு வரவழைத்து கௌரவிக்கும் பாண்டிய மன்னன் வரகுண பாண்டியன் வேடத்தில் நடித்தார் . தில்லானா மோகனாம்பாள் படத்தில் மனோரமாவின் மைனர் கணவராக நடித்தார். மேலும் திவான் பகதூர் (1943), இன்பவல்லி (1949), கலாவதி (1951), கூண்டுக்கிளி (1954) , மலைக்கள்ளன் (1954), குணசுந்தரி (1955), குலேபகாவலி (1955), நானே ராஜா (1956), ரம்பையின் காதல் (1956), அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957), மாயா பஜார் (1957), புதுமைப்பித்தன் (1957), காத்தவராயன் (1958), பெற்ற மகனை விற்ற அன்னை (1958), பூலோக ரம்பை (1958), தாய் மகளுக்குக் கட்டிய தாலி (1959), செஞ்சி லக்ஷ்மி (1960), மகா வீர பீமன் (1962), வீர அபிமன்யு (1965), திருவிளையாடல்(1969), நடு இரவில் (1970), தில்லானா மோகனாம்பாள் (1970), ஆதி பராசக்தி (1971) போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
E. R. Sahadevan was a veteran Tamil film actor. He impressed the audience with his cultured performance in character and villain roles. He made his acting debut in the film Rajasekaran Emantha Sonagiri, released in 1937. His Physique, Body language, clear pronunciation impressed many audiences. In "Thillana Mohanambal", with the intention of reaching Padmini, she exhibited a best villainous through the role of Nagalingam.
In his early days he acted in many stage plays, then started to act in feature films. His first film was Rajasekaran. Starting in the 1940s he acted in villain roles and supporting roles. He played the lead role in Rajasekaran (1937). He played Kritavarman in 'Sati Sukanya' (1942) and as Puranthanar, the maternal uncle of Apoorva Chintamani in 'Aayiram Thalaivangi Apoorva Chintamani' (1947). in' Thiruvilayadal', he played the role of the Pandiya king Varaguna Pandian, who invites T. S. Balayya, who was the music scholar Hemanatha Bhagavathar, to the palace and honors him. In Thillana Mohanambal, he played the role of Manorama's minor husband. Also, Diwan Bahadur (1943), Inbavalli (1949), Kalavathi (1951), Koondukkili (1954), Malaikallan (1954), Gunasundari (1955), Kulebagavali (1955), Naane Raja (1956), Rambaiyin Kadhal (1956), Alauddinum Arputha Vilakku (1957), Maya Bazar (1957), Puthumaipithan (1957), Kathavarayan (1958), Petra Maganai Vitra Annai (1958), Bhooloka Rambai (1958), Thaai Magalukku Kattiya Thaali (1959), Senchi Lakshmi (1960), Maha Veera Bhiman (1962), Veera Abhimanyu (1965), Thiruvilayadal (1969), Nadu Iravil (1970), Thillana Mohanambal (1970), Adi Parasakthi (1970) like this he acted more than 100 movies.
Filmography
Year | Title | Role | Co-Star | Notes |
---|---|---|---|---|
1937 | Rajasekaran Emantha Sonagiri | Debut as lead actor | ||
1941 | Dayalan | |||
1943 | Devakanya | Suravarman | ||
1943 | Dewan Bahadur | |||
1944 | Prabhavathi | Sunabhan | ||
1947 | 1000 Thalai Vaangi Apoorva Chinthamani | Purandharan | ||
1948 | Lakshmi Vijayam | King of Avandhi | ||
1949 | Inbavalli | |||
1949 | Kanniyin Kathali | Kithivarman | ||
1951 | Kalavathi | |||
1953 | Naalvar | |||
1954 | Malaikkallan | Kathavarayan | ||
1954 | Koondukkili | Sokkalingam | ||
1955 | Gulebakavali | |||
1955 | Guna Sundari | |||
1955 | Pennarasi | |||
1955 | Kaveri | |||
1956 | Rambaiyin Kaadhal | Lord Indra | ||
1956 | Naane Raja | |||
1956 | Marumalarchi | |||
1956 | Thaikkupin Tharam | Rathnam Pillai | ||
1957 | Mayabazar | Dushasana | ||
1957 | Allavudeenum Arputha Vilakkum | |||
1957 | Pudumaipithan | Parakraman | ||
1957 | Magathala Nattu Mary | |||
1957 | Makkalai Petra Magarasi | Mayandi | ||
1957 | Neelamalai Thirudan | Neelamalai Thirudan's father | ||
1957 | Chakravarthi Thirumagal | |||
1958 | Bhoologa Rambai | |||
1958 | Nadodi Mannan | the commander-in-chief of Ratnapuri | ||
1958 | Kathavarayan | |||
1958 | Chenchu Lakshmi | |||
1958 | Petra Maganai Vitra Annai | General Vikraman | ||
1958 | Sengottai Singam | Malayandi | ||
1959 | Sumangali | |||
1959 | Thaai Magalukku Kattiya Thaali | Thiruvenkatam | ||
1960 | Chenchi Lakshmi | |||
1961 | Sri Valli | Nambi Raja | ||
1962 | Mahaveera Bheeman | Bhima | ||
1964 | Navarathri | |||
1965 | Veera Abhimanyu | |||
1966 | Mahakavi Kalidas | King | ||
1966 | Saraswati Sabatham | Soldier | ||
1967 | Seetha | |||
1968 | Thirumal Perumai | Chola King | ||
1968 | Thillana Mohanambal | 'Minor' Nagalingam | ||
1970 | Nadu Iravil | |||
1971 | Aathi Parasakthi | |||
1972 | Agathiyar |
மலைக்கள்ளன் படத்தில் தனித்தும் திருப்பதிசாமியுடனும் ஈ.ஆர்.சகாதேவன்
1957-இல் வெளிவந்த “புதுமைப்பித்தன்” படத்தில் ஈ.ஆர்.சகாதேவன்
’தில்லானா மோகனம்பாள்’ [1968] படத்தில் நாகலிங்கமாக பிரகாசித்த
இ.ஆர்.சகாதேவனுடன் சில் சில் ரமாமணியாகவும் ரோசா ராணியாகவும் அசத்திய
மனோரமா
குலேபகாவலி [1955] படத்தில் ஈ.ஆர்.சகாதேவன்
குலேபகாவலி [1955] படத்தில் கே.ஏ.தங்கவேலுவுடன் ஈ.ஆர்.சகாதேவன்
1971-இல் ’வெளிவந்த மகத்தான படைப்பான ‘ஆதி பராசக்தி’ படத்தில் ஈ.ஆர்.சகாதேவன் மந்திரியாகவும் நாயக்க மன்னனாக ரி.கே.பகவதியும்
ஆதி பராசக்தி [1971] படத்தில் ஜெமினி மகாலிங்கம், ரி.கே.பகவதியுடன் சகாதேவன்
‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’ [1947] படத்தில் புரந்தரனாக ஈ.ஆர்.சகாதேவன்
‘நடு இரவில்’ [1970] படத்தில் ஈ.ஆர்.சகாதேவன்
‘நடு இரவில்’ [1970] படத்தில் சி.வி.வி.பந்துலுவுடன் ஈ.ஆர்.சகாதேவன்
‘நடு இரவில்’ [1970] படத்தில் கல்பனாவுடன் ஈ.ஆர்.சகாதேவன்
‘நடு இரவில்’ [1970] படத்தில் சோ மற்றும் வி.எஸ்.ராகவனுடன் ஈ.ஆர்.சகாதேவன்
”குணசுந்தரி” [1955] படத்தில் பரமசிவனாக ஈ.ஆர்.சகாதேவனும் பார்வதியாக ருஷ்யேந்திராமணியும்
”காத்தவராயன்” [1958] படத்தில் கே.ஏ.தங்கவேலுவுடன் ஈ.ஆர்.சகாதேவன்
”காத்தவராயன்” [1958] படத்தில் செருகளத்தூர் சாமா, ஈ.வி.சரோஜா,
சாவித்திரியுடன் ஈ.ஆர்.சகாதேவன்
E.R.Sahadevan in “Naane Raja” 1956 Tamil Movie
தாய் மகளுக்குக் கட்டிய தாலி [1959] படத்தில் பி.கண்ணாம்பாவுடன் ஈ.ஆர்.சகாதேவன்
“நீலமலைத் திருடன்” 1957 படத்தில் பி.எஸ்.வீரப்பாவுடன்
ஈ.ஆர்.சகாதேவன் 50
”ரம்பையின் காதல்” 1956 படத்தில் தேவேந்திரனாக ஈ.ஆர்.சகாதேவனும் நாரதராக
எம்.என்.நம்பியாரும்54
“செஞ்சி லட்சுமி” 1960 சந்தியாவுடன் ஈ.ஆர்.சகாதேவன்
“செஞ்சி லட்சுமி” 1960 தங்கவேலுவுடன் ஈ.ஆர்.சகாதேவன்58
“அலாவுதீனும் அற்புத விளக்கும்” 1957 படத்தில் வி.கே.ராமசாமியுடன் ஈ.ஆர்.சகாதேவன்
63
”பெற்ற மகனை விற்ற அன்னை” 1958 படத்தில் ஆர்.எஸ்.மனோகருடன் ஈ.ஆர்.சகாதேவன்
”பெற்ற மகனை விற்ற அன்னை” 1958 படத்தில் கே.கே.பெருமாளுடன் ஈ.ஆர்.சகாதேவன்
”பெற்ற மகனை விற்ற அன்னை” 1958 படத்தில் பண்டரிபாயுடன் ஈ.ஆர்.சகாதேவன்
68
ஜெமினி கணேசனுடன் ஈ.ஆர்.சகாதேவன் படம்:- சீதா [1967]
சாவித்திரி, கே.ஆர்.விஜயாவுடன் ஈ.ஆர்.சகாதேவன் படம்:- சீதா [1967]
73
கே.எஸ்.அங்கமுத்துவுடன் ஈ.ஆர்.சகாதேவன் படம்:- இன்பவல்லி [1949] 76
“மாயா பஜார்” 1957 படத்தில் டி.பாலசுப்பிரமணியத்துடன் ஈ.ஆர்.சகாதேவன்
“மாயா பஜார்” 1957 படத்தில் ஆர்.பாலசுப்பிரமணியம், எம்.என்.நம்பியாருடன்
ஈ.ஆர்.சகாதேவன்81
’திவான் பகதூர்’ 1943 படத்தில் ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் ஈ.ஆர்.சகாதேவன்
84
’வீர அபிமன்யு’’ 1965 படத்தில் ஓ.ஏ.கே.தேவருடன் பீமனாக ஈ.ஆர்.சகாதேவன்89
No comments:
Post a Comment