Saturday, August 20, 2016

ஜெமினி கணேசனும் Multi Starrerஉம் (Gemini Ganesan in Multistarrer)


     Multi Starrer தொடரில் நாம் இன்று காதல் மன்னன் ஜெமினி கணேசன் மற்ற கதாநாகர்களுடன் நடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.
  1.   காதல் மன்னனும் புரட்சி தலைவரும் (Gemini Ganesan and MGR together)
காதல் மன்னன் ஜெமினி கணேசன் தமிழ் சினிமாவின் முதல் super star-ஆன எம்.ஜி.ஆருடன் இணைந்து ஒரே ஒரு திரைப்படம் நடித்துள்ளார், அப்படம்முகராசி”. இதில் எம்.ஜி.ஆர் காவல்த்துறை அதிகரியாகவும், ஜெமினி கணேசன் தாயை கொன்றவனை பழிவாங்க துடிக்கும் எம்.ஜி.ஆரின் அண்ணன் கதாபத்திரமாகவும் நடித்து இருப்பர்கள்.
  2.    காதல் மன்னனும் நடிகர் திலகமும் (Gemini Ganesan and Sivaji Ganesan together)
காதல் மன்னன் ஜெமினி கணேசனும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளனர். இருவரும் முதலில் இணைந்து நடித்த திரை படம்பெண்ணின் பெருமை”, இத்திரைபட்த்தில் ஜெமினி கணேசன் கதாநாயகனாகவும் சிவாஜி கணேசன் வில்லனாகவும் நடித்து இருபர்கள். பிறகு இருவரும் இணைந்து நடித்த படங்கள்மர்ம வீரன்”, “ஸ்கூல் மாஸ்டர்(கன்னடம்)”, “பதிபக்தி”, “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “கப்பலோட்டிய தமிழன்”, “பசமலர்”, “பாவ மன்னிப்பு”, “பந்த பாசம்”, “பார்த்தலே பசி தீரும்”, “சரஸ்வதி சபதம்”, “கந்தன் கருணை”, “திருவருட்செல்வர்மற்றும்உனக்காக நான்அகிய படங்களில் இருவரும் கதாநாகர்களாக நடித்தனர். இருப்பினும் இருவரும் இணைந்து நடித்த கடைசி திரைபடம் என்றால் அது கமல் ஹசன் கதாநாகனாக நடித்தநாம் பிறந்த மண்திரைபடம்தான்.
  3.   காதல் மன்னனும் இலட்சிய நடிகரும் (Gemini Ganesan and S. S. Rajendran together)
காதல் மன்னன் ஜெமினி கணேசன் மற்றும் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன், இருவரும் இணைந்து நடித்த இரு திரைப்படங்கள். முதல் திரைபடம் குல விளக்கு”, இத்திரைப்பட்த்தில் சரோஜா தேவி முதன்மை கதாபத்திரதிலும் ஜெமினி கணெசனும் எஸ்.எஸ். ராஜேந்திரனும் துணைகதாபத்திரத்திலும் நடித்திருப்பார்கள். இரணடவது திரைபடம் “வைரக்கியம்” இப்படத்தில் ஜெமினி கணேசன் முதன்மை கதாபத்திரத்திலும் எஸ்.எஸ். ராஜேந்திரன் துணைகதாபத்திரத்திலும் நடித்துள்ளனர்.
  4.   காதல் மன்னனும் நவரசத் திலகமும் (Gemini Ganesan and Muthuraman together)
காதல் மன்னன் ஜெமினி கணேசன், நவரசத் திலகம் முத்துராமனுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அவற்றில் சில கற்புக்கரசி”,சுமைதாங்கி”,கற்பகம்”, “சித்தி”. “திருவருட்செல்வர்”, “அவளுக்கென்று ஒரு மனம்”, “புன்னகை”. “அன்னை வேளங்கனி”, “ஆதி பராசக்தி”, ”தெய்வம்”, “குறத்தி மகன்”, “திருமலை தெய்வம்”, “தபால்காரன் தங்கைமற்றும்ஸ்ரீ காஞ்சி காமாட்சிஅகிய திரைபடங்களில் நடித்துள்ளனர்.
   5.   காதல் மன்னனும் நடிப்புசுடரும் (Gemini Ganesan and AVM Rajan together)
நடிப்புசுடர் .வி.எம். ராஜன், அவர்கள் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன் சில திரைபடங்களில் நடித்துள்ளர். அவைவீர அபிமன்யு”, “திருமகள்”, “தெய்வம்”, “சக்தி லீலை”, “திருமலை தெய்வம்”, சாமி ஐயப்பன் (மலையாளம் & தமிழ்)” மற்றும்ஸ்ரீ காஞ்சி காமாட்சி”.    
   6.   காதல் மன்னனும் மக்கள் கலைஞரும் (Gemini Ganesan and JaiShankar together)
மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும் காதல் மன்னன் ஜெமினி கணேசனும் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் முக்கிய நடிக்கர்கள். இவர்கள் இருவரும் சில திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அவைபூவா தலையா”, “எதிர் காலம்”, “நூற்றுக்கு நூறுமற்றும்பொன்மன செல்வன்போன்ற திரைபடங்களில் நடித்துள்ளனர்.
   7.   காதல் மன்னனும் ரவிசந்திரனும் (Gemini Ganesan and RaviChandran together)
நடிகர் ரவிசந்திரன், அவர்கள் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன் சில திரைபடங்களில் நடித்துள்ளர். அவைகவிய தலைவி”, “மாலதிமற்றும்எல்லை கோடுஎன மூன்று படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
   8.   காதல் மன்னனும் மார்க்கண்டேயனும் (Gemini Ganesan and SivaKumar together)
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் சிவகுமார் அவர்கள் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன் பல திரைபடங்களில் நடித்துள்ளார். “சரஸ்வதி சபதம்”, “கந்தன் கருணை”, “பணமா பாசமா”, “அன்னை வேளங்கனி”, “திருமகள்”, “தெய்வம்”, “சக்தி லீலை”, “கங்கா கௌரி”, “கட்டிலா தொட்டிலாமற்றும்திருமலை தெய்வம்போன்ற திரைபடங்களில் இருவரும் நடித்துள்ளனர்.
   9.   காதல் மன்னனும் சுப்பர் ஸ்டாரும் (Gemini Ganesan and Rajini Kanth together)
காதல் மன்னன் ஜெமினி கணேசனும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இணைந்து ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளனர். அப்படம் தமிழ் மற்றும் மலையளத்தில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டஅலவுதினும் அற்புத விளக்கும்”, இப்படத்தில் கமலும் ரஜினியும் கதாநாயகர்களாகவும் ஜெமினி கணேசன் வில்லன் கதாபத்திரத்திலும் நடித்திருப்பார்கள்.
   10. காதல் மன்னனும் உலக நாயகனும் (Gemini Ganesan and Kamal Haasan together)
உலக நாயகன் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதே காதல் மன்னன் ஜெமினி கணேசனின்களத்தூர் கண்ணம்மாதிரைப்பட்த்தில் தான், அதன் பிறகு பல் திரைப்படத்தில் நடித்துள்ளனர். அவை பார்த்தலே பசி தீரும்”, பாத காணிக்கை”,அன்னை வேளங்கனி”, “குறத்தி மகன்”, ”நான் அவனில்லை”, “இதய மலர்”, “லலிதா”, “நாம் பிறந்த மண்”,அலவுதினும் அற்புத விளக்கும்”, “உன்னால் முடியும் தம்பிமற்றும்அவ்வை சண்முகிபோன்ற திரைபடங்களில் இணைந்து நடித்துள்ளனர். அவற்றில் களத்தூர் கண்ணம்மா”, “பார்த்தலே பசி தீரும்மற்றும்பாத காணிக்கைதிரைபடத்தில் ஜெமினி கணேசனுடன் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.
   11. காதல் மன்னனும் புரட்சி கலைஞரும் (Gemini Ganesan and Vijaya Kanth together)
புரட்சி கலைஞர் விஜயகாந்த் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன்பென்மன செல்வன்மற்றும்தாய்மொழிஎன்ற இரு திரைபடங்களில் இணைந்து நடித்துள்ளார்.
   12. காதல் மன்னனும் சுப்ரீம் ஸ்டாரும் (Gemini Ganesan and Sarath Kumarj together)
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன் தாய்மொழிஎன்ற ஒரே ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
   13. காதல் மன்னனும் இளைய திலகமும் (Gemini Ganesan and Prabhu Ganesan together)
இளைய திலகம் பிரபு அவர்கள் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன் ஒரே ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் அப்படம்சூரக்கோட்டை சிங்கக்குட்டி”.
    14.  காதல் மன்னனும் நவரச நாயகனும் (Gemini Ganesan and Karthik Muthuraman together)
காதல் மன்னன் ஜெமினி கணேசன் நவரச நாயகன் கார்த்திகுடன்மேட்டுக்குடிஎன்ற ஒரே ஒரு திரைபடத்தில் இணைந்து நடித்துள்ளார்.
   15. காதல் மன்னனும் புரட்சி நடிகரும் (Gemini Ganesan and Murali together)
காதல் மன்னன் ஜெமினி கணேசன் மற்றும் புரட்சி நடிகர் முரளியும் காலமெல்லாம் காதல் வாழ்கஎன்ற ஒரே ஒரு திரைபடத்தில் இணைந்து நடித்துள்ளார்.
   16. காதல் மன்னனும் ஆக்ஷன் கிங்கும் (Gemini Ganesan and Arjun together)
ஆக்ஷன் கிங் அர்ஜுன் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படம் கொண்டாட்டம்”.
   17. காதல் மன்னனும் மக்கள் நாயகனும் (Gemini Ganesan and Ramarajan together)
மக்கள் நாயகன் ராமராஜன் அவர்கள் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன் ஒரே ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் அப்படம்சூரக்கோட்டை சிங்கக்குட்டி”, இப்படத்தில் இளைய திலகம் பிரபு முதன்மை கதாபாத்திரதிலும் ஜெமினி கணெசன் துணைகதாபாத்திரதிலும் ராமராஜன் மிக சிறு வேடத்திலும் நடித்திருப்பார்கள்.
   18. காதல் மன்னனும் அல்டிமேட் ஸ்டாரும் (Gemini Ganesan and Ajith together)
அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்கள் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன்தொடரும் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
   19. காதல் மன்னனும் சியான் (Gemini Ganesan and Vikram together)
சியான் விக்ரம் அவர்கள் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன்ஜெமினி என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
   20. காதல் மன்னனும் நடன புயல் (Gemini Ganesan and Prabhu Deva together)
நடன புயல் பிரபு தேவா அவர்கள் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன்நாம் இருவர் நமக்கு இருவர் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
   21. காதல் மன்னனும் என்.டி. ராமா ராவும் (Gemini Ganesan and N.T. Rama Rao together)
தெலுங்கு திரையுலகின் முடிசூடா மன்ன்ன் என்.டி. ராமா ராவுடன் காதல் மன்னன் ஜெமினி கணேசன் சில திரைபடங்களில் இணைந்து நடித்துள்ளார். அவைமாயா பஜார்”, “லவகுசாமற்றும் மர்ம வீரன்”. இவற்றில்மாயா பஜார்மற்றும்லவகுசாஆகிய இரு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரான இருமொழி படங்கள். இதில்மாயா பஜார்தெலுங்கு பதிப்பில் எ. நாகேஸ்வர ராவ் நடித்த வேடத்திலும், “லவகுசாதெலுங்கு பதிப்பில் எல். காந்தா ராவ் நடித்த வேடத்திலும் ஜெமினி கணேசன் தமிழில் நடித்திருப்பார். இவ்விரு படங்களிலும் இரு பதிப்பிலும் என்.டி. ராமா ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
   22.  காதல் மன்னனும் எ. நாகேஷ்வர ராவும் (Gemini Ganesan and A. Nageshwara Rao together)
காதல் மன்னன் ஜெமினி கணேசன் ஏ.என்.ஆர்(அக்கினி நாகேஷ்வர ராவ்) உடன் சில திரைபடங்களில் பணியற்றி உள்ளார். அவைமாதர் குல மாணிக்கம்”, “கல்யாண பரிசுமற்றும்மனிதன் மாறவில்லை”. இவற்றில்மாதர் குல மாணிக்கம்மற்றும்மனிதன் மாறவில்லைஆகிய இரு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரான இருமொழி படங்கள், இரண்டிலும் என்.டி. ராமா ராவ் தெலுங்கு பதிப்பில் நடித்த வேடத்தை ஜெமினி கணேசன் தமிழில் நடித்திருப்பார். இவ்விரு படங்களிலும் இரு பதிப்பிலும் எ. நாகேஸ்வர ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
   23. காதல் மன்னனும் எல். காந்தா ராவ் (Gemini Ganesan and L. Kantha Rao together)
காதல் மன்னன் ஜெமினி கணேசன் மற்றும்  தெலுங்கு நடிகர் எல். காந்தா ராவுடன் இரு திரைபடங்களில் நடித்துள்ளார். அவைஸ்ரீ குருவாயூரப்பன் (மலையாளம்)” மற்றும்தேவி கன்னியாகுமாரி (மலையாளம்)” ஆகிய இரு மலையாள படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
   24. காதல் மன்னனும் மெகா ஸ்டாரும் (Gemini Ganesan and Chiranjeevi together)
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன்ருத்ரவீணா (தெலுங்கு)” என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
   25. காதல் மன்னனும் உதய்குமாரும் (Gemini Ganesan and Uday Kumar together)
பழம்பெரும் கன்னட நடிகர் உதய்குமார் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன்ஸ்கூல் மாஸ்டர் (கன்னடம்)” என்ற ஒரே ஒரு கன்னட திரைபடத்தில் இணைந்து நடித்துள்ளார்.
   26. காதல் மன்னனும் விஷ்னுவர்தனும் (Gemini Ganesan and Vishnuvardhan together)
கன்னட திரையுலகின் சுப்பர் ஸ்டாரான விஷ்னுவர்தன் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன்சந்தர்பா (கன்னடம்)” என்ற ஒரு கன்னட திரைபடத்தில் இணைந்து நடித்துள்ளார்.
   27. காதல் மன்னனும் ரமேஷ் அரவிந்தும் (Gemini Ganesan and Ramesh Aravind together)
நடிகர் ரமேஷ் அரவிந்த் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன் சில திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். அவைசந்தர்பா (கன்னடம்)”, “ருத்ரவீணா (தெலுங்கு)”, “உன்னால் முடியும் தம்பிமற்றும்அவ்வை சண்முகி”.
   28. காதல் மன்னனும் டி. சுகுமாரன் நாயரும் (Gemini Ganesan and T. Sukumaran Nair together)
மலையாள நடிகர் டி. சுகுமாரன் நாயர் அவர்கள், காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன் இணைந்து சில திரைபடங்களில் நடித்துள்ளார். அவைஓரல் கூடி கல்லனயி (மலையாளம்)”, “குமார சம்பவம் (மலையாளம் & தமிழ்)”, “ஸ்ரீ குருவாயூரப்பன் (மலையாளம்)”, “ப்ரொஃபசர் (மலையாளம்)”, “ஜீஸஸ் (மலையாளம்)”, “தேவி கன்னியாகுமாரி (மலையாளம்)”, “சாமி ஐயப்பன் (மலையாளம் & தமிழ்)”, “ஸ்ரீ முருகன் (மலையாளம்)” மற்றும்அலவுதினும் அற்புத விளக்கும் (மலையாளம்)”.
   29.  காதல் மன்னனும் மதுவும் (Gemini Ganesan and Madhu together)
காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன் மலையாள நடிகர் மதுகருத்த ராத்திரிகள் (மலையாளம்)” மற்றும்சாமி ஐயப்பன் (மலையாளம் & தமிழ்)” என்ற இரு திரைபடங்களில் இணைந்து நடித்துள்ளார்.
   30. காதல் மன்னனும் சத்தியன் (Gemini Ganesan and Sathiyan together)
காதல் மன்னன் ஜெமினி கணேசனும் மலையாள நடிகர் சத்தியனும்ஆஸதீபம் (மலையாளம்)” என்ற ஒரே ஒரு மலையாள திரைபடத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
   31. காதல் மன்னனும் பிரேம் நஸீர் (Gemini Ganesan and Prem Nazir together)
மலையாள சினிமாவின் ஜெம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்பட்ட பிரேம் நஸீர் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன்ஓரல் கூடி கல்லனயி (மலையாளம்)” என்ற ஒரு திரைபடத்தில் இணைந்து நடித்துள்ளார்.
   32. காதல் மன்னனும் ஜெயராம் (Gemini Ganesan and Jayaram together)
மலையாள நடிகர் ஜெயராம் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
   33. காதல் மன்னனும் ராஜ் கபூரும் (Gemini Ganesan and Raaj Kapoor together)
ஹிந்தி நடிகர் ராஜ் கபூர் அவர்கள் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன்நஷ்ரனா (ஹிந்தி)என்ற ஒரே ஒரு திரைபடத்தில் இணைந்து நடித்துள்ளார். இதில் ஜெமினி கணேசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.
   34. காதல் மன்னனும் கிஷோர் குமார் (Gemini Ganesan and Kishore Kumar together)
ஹிந்தி நடிகர் கிஷோர் குமார் அவர்கள் காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன் மிஸ் மேரி (ஹிந்தி)என்ற ஒரே ஒரு திரைபடத்தில் இணைந்து நடித்துள்ளார். இதில் ஜெமினி கணேசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

No comments:

Post a Comment

Solvathellam Unmai (1987 Tamil)

Cast Vijaya Kanth Rekha JaiShankar Radha Ravi Senthil Kovai Sarala Anuradha Poornam Viswanathan Delhi Ganesh Kallapetti Singaram Usilaimani ...