மன்னிக்கவும்
நண்பர்களே உங்களை வெகுகாலம் காக்க வைத்தற்கு (யாரும் என் பதிவுக்களை படிப்பதில்லை என்று தெரியும்),
நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் மற்ற கதாநாகர்களுடன் நடித்த படங்களை பற்றி இங்கு
பதிவெற்றுகிறேன்.
1.
இலட்சிய நடிகரும் புரட்சி தலைவரும்(S.S. Rajendran and
MGR together)
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும் இணைந்து இரண்டு திரைபடங்களில் நடித்துள்ளனர். முதல் திரைபடம் “ராஜா தேசிங்கு”- இதில் எம்.ஜி.ஆர் ராஜா தேசிங்கு மற்றும் தவுத் கான் என இரு வேடங்களில் நடித்து இருப்பர், எஸ்.எஸ்.ஆர் ராஜா தேசிங்கின் தளபதி முகமத் கான் வேடத்தில் நடித்திருப்பார். இரண்டவது திரைபடம் “கஞ்சித்தலைவன்”-இதில் எம்.ஜி.ஆர் பல்லவ மன்னன் நரசிம்ம பல்லவனகவும், எஸ்.எஸ்.ஆர் தளபதி பரஞோதியகவும் நடித்திருப்பார்கள்.
2.
இலட்சிய நடிகரும் நடிகர் திலகமும் (S.S. Rajendran
and Sivaji Ganesan together)
நடிகர் திலகம்
சிவாஜி கணேசன் மற்றும் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன், இருவரும் ”பரசக்தி” திரைபடத்தில் இணைந்தே அறிமுகம் ஆனார்கள். அதன் பிறகு இருவரும் பல திரைபடங்களில் இணைந்து நடித்துள்ளனர். அவை “பணம்”, “மனோகரா”, “ராஜா ராணி”, “ரங்கோன் ராதா”, “தெய்வ பிறவி”, “செந்தாமரை”, “பெற்றமனம்”, “ஆலயமணி”, “குங்குமம்”, “கை கொடுத்த தெய்வம்”, “பச்சை விளக்கு”, “பழனி”, “சாந்தி”, “தாயே உனக்காக” மற்றும் “எதிரோலி” அகிய திரைபடங்கள் ஆகும். இதில் “தாயே உனக்காக” படத்தில் மட்டும் இருவரும் இணைந்து நடித்து போல் காட்சியே இல்லை.
3.
இலட்சிய நடிகரும் காதல் மன்னனும் (S.S. Rajendran and
Gemini Ganesan together)
காதல் மன்னன் ஜெமினி கணேசன் மற்றும் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன், இருவரும் இணைந்து நடித்து இரு திரைப்படங்கள். ஓன்று “குல விளக்கு”, இத்திரைப்பட்த்தில் சரோஜா தேவி முதன்மை கதாபத்திரதிலும் ஜெமினி கணெசனும் எஸ்.எஸ். ராஜேந்திரனும் துணைகதாபத்திரத்திலும் நடித்திருப்பார்கள். இரண்டவது
“வைரக்கியம்”, இதில் ஜெமினி கணெசன் முதன்மை கதாபத்திரதிலும் எஸ்.எஸ். ராஜேந்திரன் துணைகதாபத்திரத்திலும் நடித்திருப்பார்கள்.
நவரசத் திலகம் முத்துராமன் அவர்கள் அனைத்து கதாபத்திரங்களையும் திறம்பட செய்பவர். முத்துராமன் நடிகர் திலகம் சிவாஜியின் “ரங்கோன்
ராதா” என்ற திரைபடத்தில் மிகச்சிறு வேடத்தில் நடித்திருப்பார்,
இப்படத்தில் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் ஒரு துணை கதாபத்திரத்தில் நடித்திருப்பார். பிறகு எஸ்.எஸ். ராஜேந்திரனின்
“எதையும் தாங்கும் இதயம்” திரைபடத்தில் அறிமுகம் ஆனார் நவரசத் திலகம் முத்துராமன்.
பின் இருவரும் இணைந்து சில திரைபடங்களில் நடித்தூள்ளனர், அவை “வனம்பாடி”, “குங்குமம்”, “பழனி”, “மறக்க முடியுமா” மற்றும் ”தாயே உனக்காக”.
நடிப்புசுடர் எ.வி.எம். ராஜன், அவர்கள்
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின்
“நானும் ஒரு பெண்” திரைபடத்தில் அறிமுகமானார்.
பிறகு இருவரும் நடிகர் திலகம் சிவாஜியின் “பச்சை விளக்கு” திரைபடத்தில் துணைகதாபத்திரத்தில் நடித்திருந்தனர்.
மக்கள் கலைஞர்
ஜெய்சங்கர், அவர்கள் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆருடன் இளமை காலங்களில் இணைந்து நடிக்க வாய்ப்பு அமையவில்லை.
இருவரும் நடித்த ஒரே திரைபடம் புரட்சி கலைஞர் விஜயகாந்தின் “தர்மா” திரைப்படம் தான். இதில்
ஜெய்சங்கர் விஜயகாந்தின் தந்தையகவும் எஸ்.எஸ்.ஆர் தமிழ்நாட்டின் முதனமை அமைச்சராகவும் நடித்திருப்பார்கள்.
நடிகர் ரவிசந்திரன் அவர்கள் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின்
“தேடி வந்த திருமகள்” திரைபடத்தில் எதிர்மறை கதாபத்திரத்தில் நடித்திருப்பார்.
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் சிவகுமார் அவர்கள் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ரஜேந்திரனின் “காக்கும் கரங்கள்” திரைப்படத்தின் முலமாக
அறிமுகமார். பிறகு “தாயே உனக்காக” மற்றும் “எதிரோலி” திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
உலக நாயகன் கமல் ஹாசன் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆருடன் “வானம்பாடி” என்ற திரைப்படத்தில்
குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.
புரட்சி கலைஞர்
விஜயகாந்த் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆருடன் “தர்மா” என்ற
ஒரே ஒரு திரைபடத்தில் இணைந்து நடித்துள்ளார்.
புரட்சி தமிழன்
சத்யராஜ் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனுடன் “அன்பின் முகவரி”
என்ற திரைபடத்தில் நடித்துள்ளார், இதில் எஸ்.எஸ்.ஆர் துணைகதாபத்திரத்திலும் சத்யராஜ்
எதிர்மறை கதாபத்திரத்திலும் நடித்திருப்பார்கள்.
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆருடன் “ரிஷி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதில் சரத்குமார் முதன்மை கதாப்பாத்திரத்திலும் எஸ்.எஸ்.ஆர் தமிழ்நாட்டின் முதனமை அமைச்சராகவும் நடித்திருப்பார்கள்.
நடிகர் எஸ்.வீ.
சேகர் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆருடன் “ரிஷி” என்ற திரைப்படத்தில்
நடித்துள்ளதாக Wikipedia இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நான் தேடிப்பார்த்தில்
“ரிஷி” திரைபடத்தில் எஸ்.வீ. சேகரை பார்க்க முடியவில்லை, இருப்பினும்
இங்கே இருவரும் இணைந்து நடித்த திரைபடமாக பதிந்துள்ளேன்.
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.
ஆர் அவர்கள் வெள்ளிவிழா நாயகன் மோகனுடன் “அன்பின் முகவரி” என்ற ஒரு திரைப்படத்தில்
இணைந்து நடித்துள்ளார்.
நடிகர் ராம்கி அவர்கள்
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆருடன் “ராஜாளி” என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
அருண் பாண்டியன் அவர்கள்
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆருடன் “ரிஷி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதில் அருண் பாண்டியன் வில்லன் கதாப்பாத்திரத்திலும் எஸ்.எஸ்.ஆர் தமிழ்நாட்டின் முதனமை அமைச்சராகவும் நடித்திருப்பார்கள்.
மாவீரன் நெப்போலியன்
அவர்கள் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆருடன்
“ராஜாளி” என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
லிட்டில் சுப்பர் ஸ்டார்
சிம்புவே இளம் தலைமுறையினரில் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆருடன்
நடித்த ஒரே நடிகர். இவ்விருவரும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம்
“தம்”.
பழம்பெரும்
கன்னட நடிகர் கல்யாண் குமார் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.
ராஜேந்திரனுடன் “நீங்காத நினைவு” என்ற ஒரே ஒரு திரைபடத்தில் இணைந்து
நடித்துள்ளார்.
மலையாள சினிமாவின் ஜெம்ஸ்
பாண்ட் என்று அழைக்கப்பட்ட பிரேம் நஸீர் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனுடன் பல படங்களில்
இணைந்து நடித்துள்ளார். அவை “தை பிறந்தால் வழி பிறக்கும்”, “கல்யாணிக்கு கல்யாணம்”,
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”, “தங்கரத்தினம்”, “தங்கம் மனசு தங்கம்” மற்றும் “வழிகாட்டி”.
No comments:
Post a Comment