Monday, August 31, 2015

எம்.ஜி.ஆரும் Multi Starrerஉம் (MGR in MultiStarrer)

 Multi Starrer தொடரில் நாம் முதலில் பர்க்கப்போவது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்ற கதாநாகர்களுடன் நடித்த படங்களை பற்றிதான்.

1.   புரட்சி தலைவரும் நடிகர் திலகமும் (MGR and Sivaji Ganesan together)

ஏறக்குறைய தமிழ் சினிமாவின் 
முதல் superstars என்றால் அது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தான்அவர்கள் 
இருவரும் இணைந்து நடித்த ஒரே 
ஒரு திரைப்படம் “கூண்டுக்கிளி”. 
இதில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகவும் சிவாஜி வில்லனாகவும் நடித்து
இருப்பார்கள்.








2.   புரட்சி தலைவரும் காதல் மன்னனும் (MGR and Gemini Ganesan together)

எம்.ஜி.ஆர் இணைந்து நடித்த மற்றோரு super star காதல் மன்னன் ஜெமினி கணேசன். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே திரை படம்முகராசி”. இதில் எம்.ஜி.ஆர் காவல்த்துறை அதிகரியாகவும், ஜெமினி கணேசன் தாயை கொன்றவனை பழிவாங்க துடிக்கும் எம்.ஜி.ஆரின் அண்ணன் கதாபத்திரமாகவும் நடித்து இருப்பர்கள்.








3.   புரட்சி தலைவரும் இலட்சிய நடிகரும் (MGR and SSR together)

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும் இணைந்து இரண்டு திரைபடங்களில் நடித்துள்ளனர், அவை “ராஜா தேசிங்கு” மற்றும் “காஞ்சி தலைவன்”. அதில் மிக முக்கியமன திரைபடம்ராஜா தேசிங்கு”. இதில் எம்.ஜி.ஆர் ராஜா தேசிங்கு மற்றும் தவுத் கான் என இரு வேடங்களில் நடித்து இருப்பர், எஸ்.எஸ்.ஆர் ராஜா தேசிங்கின் தளபதி முகமத் கான் வேடத்தில் நடித்திருப்பார். இரண்டவது திரைப்படம் “கஞ்சித்தலைவன்”, இதில் எம்.ஜி.ஆர் பல்லவ மன்னன் நரசிம்ம பல்லவனாகவும் எஸ்.எஸ்.ஆர் தளபதி பரஞோதியாகவும் நடித்திருப்பார்கள்.


4.   புரட்சி தலைவரும் நவரசத் திலகமும் (MGR and Muthuraman together)

நவரசத் திலகம் முத்துராமன் அவர்கள் அனைத்து கதாபத்திரங்களையும் திறம்பட செய்பவர். அவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் சில படங்களில் நடித்துள்ளர். அவற்றில் சில “அரசிளங்குமரி”, “தேர் திருவிழா”, ”கண்ணன் என் காதலன்”, ”என் அண்ணன்” மற்றும்ஒரு தாய் மக்கள்”.










5.   புரட்சி தலைவரும் நடிப்புசுடரும் (MGR and AVM Rajan together)

நடிப்புசுடர் என அழைக்கப்பட்ட நடிகர் .வி.எம். ராஜன். இவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடன் இரு படங்களில் நடித்துள்ளர். அவைஎங்கள் தங்கம்மற்றும்நவரத்தினம்”.












6.   புரட்சி தலைவரும் கல்யாண் குமாரும் (MGR and Kalyan Kumar together)

கல்யாண் குமார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன்பாசம்என்னும் திரைபடத்தில் எம்.ஜி.ஆர் அவரிகளின் அண்ணன் கதாபத்திரத்தில் நடித்திருப்பார்.













7.   புரட்சி தலைவரும் மார்க்கண்டேயனும் (MGR and SivaKumar together)

தமிழ் சினிமாவின் என்றும் மார்க்கண்டேயன் சிவகுமார் அவர்கள் தான். சிவகுமார் அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் இரு படங்களில் நடித்துள்ளார். அவைகாவல்காரன்மற்றும்இதய வீணை”.












8.   புரட்சி தலைவரும் உலக நாயகனும் (MGR and Kamal Haasan together)

உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்ஆனந்த ஜோதிதிரை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.














9.   புரட்சி தலைவரும் சி.எல்ஆனந்தனும் (MGR and C.L. Anandan together)

சி.எல். ஆனந்தன் அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன்தனி பிறவிதிரை படத்தில் வில்லன் வேடம் எற்றிருப்பார்.














10.   புரட்சி தலைவரும் சந்திர மோகனும் (MGR and Chandra Mohan together)

தெலுங்கு நடிகர் சந்திர மோகன் எம்.ஜி.ஆருடன்நாளை நமதேதிரைபடத்தில் இளைய தம்பி வேடத்தில் நடித்திருப்பார்.














11. புரட்சி தலைவரும் திரைகதை மன்னனும் (MGR and K. Bhagyaraj together)

தமிழ் சினிமாவில் திரைகதை மன்னன் என அழைக்கப்படுபவர் பாக்கியராஜ் அவர்கள். பாக்கியராஜ் அவர்கள் புரட்சி தலைவரின் பாதியில் நின்றஅண்ணா என் தெய்வம்திரைபடத்தின் காட்சிகளை வைத்து உருவக்கிய படம்அவசர போலீஸ் 100” மேலும் அத்திரைபடத்தில் இரட்டை வேடத்தில் நடித்தும் இருப்பார் பாக்கியராஜ்.








பின் குறிப்பு:-

     எனக்கு தெரிந்த விவரங்களை இங்கே எழுதியுள்ளேன். இதில் எதேனும் குறைகள் இருந்தாலோ விவரங்கள் விடுபட்டிருந்தாலோ சுட்டிகாட்டவும். உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறென். நன்றி.

No comments:

Post a Comment

Solvathellam Unmai (1987 Tamil)

Cast Vijaya Kanth Rekha JaiShankar Radha Ravi Senthil Kovai Sarala Anuradha Poornam Viswanathan Delhi Ganesh Kallapetti Singaram Usilaimani ...